முள்ளங்கி மண்ணுக்கு உணவு தந்து ஊட்ட சத்தை பெறுக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.!

Write By: admin Published In: ROOT Created Date: 2015-06-09 Hits: 4878 Comment: 0

முள்ளங்கி மண்ணுக்கு உணவு தந்து ஊட்ட சத்தை பெறுக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.!

முள்ளங்கி மண்ணுக்கு உணவு தந்து ஊட்ட சத்தை பெறுக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.!

மண்ணின் வளத்தைப் பெருக்க மூடு பயிர் வளர்ப்பது தமிழக விவசாயிகளுக்கு புதிதல்ல. நெல்லை அறுவடை செய்து கோடை காலங்களில் வேர் முடிச்சி தாவரமான சணப்பையையும், தண்டு முடிச்சி தாவரமான செஸ்பேனியா ரோஸ்டிரேட்டாவையும் தமிழகத்தில் பல காலமாகவே இயற்கை உரத்திற்காக வளர்த்து வருகின்றனர். மேலை நாடுகளில் இந்தத் தொழில்நுட்பம் இதுவரை அதிகம் பிரபலமாகவில்லை. தற்போது மேலை நாடுகளிலும் இது போன்ற தொழில்நுட்பத்தை மூடு பயிராக அறிமுகப்படுத்தத் தொடங்கி உள்ளனர். Cover Crops என்ற நிறுவனம் மிகப்பெரிய அளவில் இது போன்ற மூடு பயிர்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த நிறுவனம் கீழ்காணும் மூடுபயிர்களை விற்கிறார்கள்.
mullangi21. ஆழ ஊடுருவி வளரும் ரை புல்வகைகள்.
2. மித வெப்பத்தில் வளரும் வேர் முடிச்சு பயிறு வகைகள் – சணப்பை
3. குளிர்கால பயிறுவகைகள் Winter Pea,Hairy Vetch,Crimson Clover,Medium Red Clover,Sweet Blue Lupin
4. முள்ளங்கி
5. மேற்கூறிய பயிர்களின் கலவை
முள்ளங்கி
தமிழ தட்பவெப்பத்துக்கு ஏற்ற வகையில் வளரும் பெரும்பாலான பயிர்களைப் பற்றி தமிழக விவசாயிகள் அறிந்து இருப்பார்கள். ஆனால் முள்ளங்கியை மூடு பயிராக பயன்படுத்துவது உண்மையிலேயே நூதன முயற்சியாகும். முக்கிய பயிரை அறுவடை செய்து அடுத்த வருட பயிர் போடும் முன் முள்ளங்கியை மூடுபயிராக வளர்ப்பதன் மூலம் உழவுக்கும் (no tilage), அடுத்த பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான உணவை அளிக்கவும், மண்ணின் கரிம வளத்தை அதிகரிக்கவும், களையை கட்டுபடுத்தவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தலாம் என்கிறார்கள்.
பயன்கள்:
முள்ளங்கியின் ஆணி வேர் சுமார் 50 செமி நீளத்திற்கு வளரக்கூடியது. இது சாதாரண உழவு எந்திரம் மண்ணுக்கு கீழே ஊடுருவி செல்லும் ஆழத்தை விட அதிகம். இவ்வாறு ஆழமாக ஊடுருவி சென்று மண்ணுக்கு அடியில் இருக்கும் அனைத்து வகை சத்துக்களையும் எடுத்து முள்ளங்கி தண்டில் சேமிக்கிறது.

இந்த முள்ளங்கி தண்டை மண்ணில் மக்க விடுவதன் மூலம் அடுத்து பயிரிடும் பயிர்களுக்கு தேவையான நேரத்தில் (முதல் 3 மாதங்களுக்கு) வேர் பகுதியிலேயே எளிதான உணவு கிடைக்கிறது.(Bio-Drilling)
அவ்வாறு வேர் மற்றும் வேர் தண்டு மக்கும் போது காற்று மற்றும் நீர் ஊடுருவி செல்ல ஏதுவாக இருக்கிறது.

முள்ளங்கி வளரும் போது தனது இலைகளால் பூமியின் மேல் பரப்பை மறைத்து விடுவதால் களை செடிகள் வளர்வது கட்டுப்படுத்தப்படும்.
முள்ளங்கி மக்கும் போது ஐசோதயோசயனேட் போன்ற குளுகோசினோலேட்குகள் வெளியாகிறது. அவை பயிருக்கு நோயை உருவாக்கும் நெமட்டோட் மற்றும் காளான்களை அழிக்கும் தன்மை உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

மக்கிய முள்ளங்கி அதிக அளவு மண்புழுக்களையும் நல்லது செய்யும் நுண்ணியிரிகளையும் கவர்ந்திழுக்கிறது.

கால்நடைகளை இந்த முள்ளங்கியை மேயவிட்டு தீவனமாகவும் உபயோகப்படுத்தலாம் என்கிறார்கள். முள்ளங்கியோடு சில புல் வகைகளையும் கலந்து பயிரிட்டால் கால்நடைகளுக்கு நல்ல உணவாகும் .

எப்படி பயன்படுத்துவது?:

அமெரிக்காவில் கடுங்குளிர் வருவதற்கு 3 – 10 வாரம் முன் இந்த முள்ளங்கியை பயிரிட பரிந்துரைக்கிறார்கள். குளிர் காலம் வந்தவுடன் தானாகவே பயிர் இறந்துவிடும். அடுத்த வருடம் மார்ச் முதல் ஜூலை வரை மண்ணில் மக்கி அதிக சத்துக்களை அப்போது வளரும் முக்கியப்பயிருக்கு அளிக்கிறது. குளிர் இல்லாவிட்டால் கால்நடைகளை மேய விட்டோ, களைகொல்லி மூலமாகவோ, பயிரை அழித்துவிடலாம் இந்தியாவின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப முள்ளங்கியை எப்போது பயிட்டால் அடுத்த பயிருக்கு முழுமையாக பலன் கிடைக்கும் என்று ஆராய்ச்சி செய்து தரப்படுத்தலாம்.

தற்போது இந்தியாவில் கால்நடைகள் குறைந்து விட்டதால் மண்வளம் காக்க சாணி எரு கிடைப்பது அறிதாகியுள்ளது. எனவே இயற்கையாக மண்வளம் காக்க உதவும்

Tags:

Same In Category

Related Blogs By Tags

Leave A Comment

Captcha