இறைச்சியை தவிர்த்து உடலை வலுவேற்றும் சைவ உணவுகள்..!

Write By: admin Published In: ROOT Created Date: 2015-06-08 Hits: 1765 Comment: 0

சிலர் உடல் வலிமையை அதிகரிப்பதற்கு, ஜிம் சென்று பயிற்சி செய்து, நன்கு இறைச்சி உணவுகளை சாப்பிடுவார்கள். எத்தனை நாட்கள் தான் அசைவ உணவுகளையே சாப்பிட்டு கொண்டிருக்க முடியும்.

சிலர் உடல் வலிமையை அதிகரிப்பதற்கு, ஜிம் சென்று பயிற்சி செய்து, நன்கு இறைச்சி உணவுகளை சாப்பிடுவார்கள். எத்தனை நாட்கள் தான் அசைவ உணவுகளையே சாப்பிட்டு கொண்டிருக்க முடியும். எந்த ஒரு விருப்பமான உணவாக இருந்தாலும், அனைத்திற்கும் அளவு என்ற ஒன்று உள்ளது. இத்தகைய அளவானது மீறினால், அதுவே உடலுக்கு நஞ்சாகிவிடும். எனவே உடல் வலிமையை அதிகரிப்பதற்கு அசைவ உணவுகளை மட்டும் சாப்பிடாமல், சைவ உணவுகளையும் சாப்பிட வேண்டும்.

இப்போது அவ்வாறு உடல் தசைகளை நன்கு வலுவாக்கும் சைவ உணவுகள் எவையென்று ஒருசில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை உணவுகளில் சேர்த்து உடலை வலிமையோடு வைத்துக் கொள்ளுங்கள்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் நார்ச்சத்துக்கள் மற்றும் இயற்கையான இனிப்புக்கள் உள்ளன. எனவே இத்தகைய வாழைப்பத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் சக்தியானது அதிகரிப்பதோடு, உடலும் வலிமையடையும்.

வேர்க்கடலை வெண்ணெய்
இந்த வெண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் என்னும் நல்ல கொழுப்புக்கள் அதிகமாகவே நிறைந்துள்ளது. எனவே இவற்றை சாப்பிட இதயம் பாதுகாப்புடன் இருப்பதோடு, செரிமானத்தை மெதுவாக நடைபெறச் செய்து, உடலில் சக்தியை நீண்ட நேரம் இருக்கச் செய்யும்.

பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட் ஜூஸை தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன் குடித்து வந்தால், நீண்ட நேரம் நன்கு புத்துணர்ச்சியுடன் உடற்பயிற்சியை மேற்கொள்ள முடியும். இதற்கு பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்களே காரணம்.

தண்ணீர்
உடலில் நீர் வறட்சி ஏற்பட்டாலும், உடல் விரைவில் சோர்ந்துவிடும். மேலும் உடலில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்து, உடல் பொலிவையும் பாதிக்கும். எனவே முடிந்த அளவு அதிகமான அளவில் தண்ணீரை பருக வேண்டும்.

சிவப்பு திராட்சை
சிவப்பு திராட்சையில் உள்ள இயற்கை சர்க்கரையானது, உடலினுள் செல்லும் போது எனர்ஜியாக மாற்றப்பட்டுவிடுவதால், இதனை சாப்பிட்டால், உடல் நீண்ட நரம் வலிமையோடும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

காபி
மனதைப் புத்துணர்ச்சியாக்கும் உணவுப் பொருட்களில் காபியும் ஒன்று. காபியில் உள்ள காப்ஃபைன், மூளையில் உள்ள செல்களை புத்துணர்ச்சியுடன் வைக்கும். ஆனால் இதை அதிகமாக பருகினால், அது பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அதையே அளவாக குடித்தால், ஒற்றை தலைவலியை குணப்படுத்தும் மற்றும் உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

பீன்ஸ்
பீன்ஸில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் செல்களை வலிமைப்படுத்தும். ஆகவே உடலை வலிமையோடு வைத்துக் கொள்ள நினைத்தால், பீன்ஸ் சேர்த்துக் கொள்வது நல்லது.

பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதோடு, வைட்டமின் சி-யும் நிறைந்துள்ளது. இதனால் நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைத்திருப்பதோடு, வைட்டமின் சி உடலுக்கு வலிமையையும் தரும்.

சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அத்தகைய சிட்ரஸ் பழங்களால் ஆன ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்புடனும், சோர்வின்றியும் இருக்கும்.

கைக்குத்தல் அரிசி
காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள கைக்குத்தல் அரிசியில், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி காம்ப்ளக்ஸ் கூட அதிகம் உள்ளது. மேலும் இதில் குறைந்த அளவில் மாவுப் பொருள் இருப்பதால், செரிமானமடைவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு, நீண்ட நேரம் உடலை புத்துணர்ச்சியுடனும், வலுவோடும் வைத்துக் கொள்ளும்.

ஆப்பிள்
ஆப்பிளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இவை இரத்த அணுக்களின் அளவை அதிகரிப்பதோடு, ஒவ்வொரு செல்களையும் எளிதில் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

க்ரீன் டீ
காப்ஃபைன் பானங்களைப் போன்றே க்ரீன் டீயிலும், மூளைச் செல்களை புத்துணர்ச்சியடையச் செய்யும் தன்மை நிறைந்துள்ளது. ஆகவே இதனை குடித்தால், உடல் சோர்வின்றி, பொலிவோடு மின்ன ஆரம்பிக்கும்.

தினை
பொதுவாக தினை விளையாட்டு வீரர்களுக்கான ஒரு சக்தி நிறைந்த உணவுகளுள் ஒன்று. இத்தகைய தினையை உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள அமினோ ஆசிட், தசைகளை வலுவோடு வைத்துக் கொள்ளும்.

பாதாம்
பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் அடங்கியுள்ளது. இத்தகைய ஃபேட்டி ஆசிட்டுகள், உடலுக்கு எனர்ஜியைக் கொடுக்கக்கூடியவை. எனவே இதனை சாப்பிட்டால், உடல் வலுவோடு இருக்கும்.

சோயாபீன்
சோயாபீன்ஸிலும் தசைகளை வலுவடையச் செய்யும் சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே இத்தகைய சோயாபீன்ஸை உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிட்டு செய்தால், நீண்ட நேரம் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

மக்கா (Maca)
மக்கா என்பது ஒரு மூலிகை. இதனை சாப்பிட்டடால், ஒரு புதுவிதமான எனர்ஜி கிடைப்பதோடு, இல்லற வாழ்வில் ஈடுபடவும் ஒரு நல்ல வலிமை கிடைக்கும்.

உலர் பழங்கள்
உலர் பழங்களில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இத்தகைய பழங்களை ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், அதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைய எனர்ஜியைக் கொடுக்கும்.

பூசணிக்காய்
பூசணிக்காயில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் உள்ளது. இதில் கலோரிகள் மிகவும் குறைவு. இருப்பினும் இவை நீண்ட நேரம் பசியெக்காமல் வைத்திருப்பதோடு, ஹார்மோன்களை நன்கு புத்துணர்ச்சியுடன் வைக்கும்.

சோளம்
சோளத்தில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் அடங்கியுள்ளது. மேலும் இதில் கிளைகோஜன் உள்ளதால், அவை நிமிடத்தில் உடலுக்கு வலுவையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

Tags: 781

Same In Category

Leave A Comment

Captcha